‘பாலி ஊஞ்சல்’
பாலி பயணம்: 20–03–2025: – என் பார்வையில்....
பயணத்தின் இரண்டாம் நாள். Use Google Translator to read my Tamil Text in English also.
நாங்கள் தங்கியிருந்த ஸ்தலா உபூடு ஹோட்டலில் காலை உணவு முடிந்தவுடன் அவரவர் ஜோடி புகைப்படங்கள் எடுத்தபிறகு, ‘பாலி ஊஞ்சல்’ பயணத்திற்கு அனைவரும் ஆவலாக சென்றோம்.
Bali Swing என்ற அழகிய பள்ளத்தாக்கில் 10க்கும் மேற்பட்ட விதவிதமான ஊஞ்சல்கள் கட்டி நம்மை அதில் ஏற்றி ஆகாயத்தில் பயணிக்க வைக்கிறார்கள்.
தனியாகவும், ஜோடியாகவும், உயரமாகவும், கட்டில் போன்றும், பறவைக்கூடுகள் போன்றும், பலவித வடிவங்களில் இந்த ‘தொட்டில் ஆட்டம்’ அனைவரையும் மிகவும் கவர்ந்தது.
சரியான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருவதால் யாருக்கும் எந்த பயமும் இல்லை.
பல வெளிநாட்டுப் பெண்கள் இதற்கான பிரத்யேக உடைகளையும் அணிந்து ஊஞ்சல் ஆட்டத்தில் விண்ணையும் மண்ணையும் மீண்டும் மீண்டும் தொட்டு மகிழ்ந்தனர்.
நண்பர்கள் அவர் தம் மனைவியர் அனைவரும் விரும்பி தங்கள் ஆட்டைத்தை தொடங்கி, தொடர்ந்தனர். நாங்கள் அழைத்துச் சென்ற புகைப்படக் காரர்கள் சீனுவும், ராஜுவும்தான் அனைத்து ஊஞ்சல்களுக்கும் ஓடி ஆடி அனைவரின் மகிழ்ச்சியையும் படம் பிடித்தனர்.
புதுமண தம்பதிகள் போல் அனைவரும் புகைப்படத்திற்கு ஆர்வமாக காட்சி கொடுத்தது, அவர்களின் மகிழ்வான மனநிலையை பிரதிபலித்தது.
அங்கேயே மதிய உணவு. மிகவும் நன்றாக இருந்தது.
உணவு முடிந்து Volcano View Point(Penelokan Viewpoint) + Luwak Coffee Plantation + Rice Terrace ஆகிய இடங்களைப் பார்த்தவுடன் மாலை 5.30 மணியாகிவிட்டது. மழையும் பிடித்துக் கொண்டது.
எனவே இரவு உணவுக்கு கிளம்பி வந்து, பிறகு ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தோம்.







அருமை! உங்கள் பாலி பயண அனுபவத்தைப் படித்ததும், நாங்களும் அந்த மகிழ்ச்சியில் பங்கு கொண்டோம். அந்த ஊஞ்சல் ஆட்டம் எங்களை எல்லாம் புதுப்பித்து, இளமையாக உணர வைத்தது. நாங்களும் நடனமாடி, சிரித்து, அன்றாட வாழ்க்கையின் அலுப்பிலிருந்து விடுபட்டு, ஒரு புத்துணர்ச்சியான அனுபவத்தைப் பெற்றோம்.
ReplyDeleteபகிர்ந்த நினைவுகளை அசைபோடுவதும், நல்ல நேரங்களை மீண்டும் வாழ்வதும் மனதிற்கு மிகவும் ஆறுதலாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருந்தது. நாம் அனைவரும் ஒரு பெரிய சமூகத்தின் ஒரு பகுதி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது.