Posts

Image
  NUSA PENIDA ISLAND - பாலி பயணம் – ‘‘கடலில் ஒரு இலவச பாலி ஊஞ்சல்’’ நான்காவது நாள் – 22.03.2025 சனிக்கிழமை இன்று  பாலித் தீவு அருகில் உள்ள NUSA PENIDA தீவுக்கு பயணப்படத் திட்டம்.  காலை 9 மணிக்குள் அனைவரும் காலை சிற்றுண்டி அருந்திவிட்டு, பஸ்ஸில் Sanur Harbour என்ற இடத்திற்கு சென்றோம். சுமார் 45 நிமிட பயணம். அங்கிருந்து ‘‘வேகப்படகு’’ மூலமாக சுமார் 75 நிமிடங்கள் ஆழ்கடலில் பயணம் செய்து NUSA PENIDA தீவை வந்தடைந்தோம். அங்கிருந்து அந்த தீவில் சுமார் நான்கு சுற்றுலா இடங்களுக்கு ( Broken Beach, Angel Billabong, Kling king Clif & Crystal Bay)  காரில் சென்று பார்வையிட்ட பிறகு, மதிய உணவும் அங்கேயே அருந்திய பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் இதே படகுப் பயணத்தில் பயணம் செய்து பாலித் தீவு வந்தடைய திட்டம். படகில் பயணிக்கும் போதே பல ஜோடிகளுக்கு ரொமான்ஸ் மூட் வந்துவிட்டது. அவர்கள் படகின் பின்புறம் சென்று கடலின் பயண வேகத்திலும் இறுகப்பற்றி போட்டோ ஷூட் நடத்தியது, எங்களுக்கும் ஒரு பொழுது போக்காக அமைந்தது. சுமார் 75 நிமிடப் பயணத்திற்குப் பிறகு   Nusa Penida தீவின் கரையில...
Image
 மறக்கவே.. மறக்கவே.. முடியாதது. கல்லூரி படிப்பு முடித்த 40 ஆண்டுகளுக்குப் பிறகும் - வாழ்வின் அனைத்து முக்கிய கட்டங்களையும் கடந்து ஓய்வை நோக்கி பயணிக்கும் போதும் - அதே கல்லூரி நாட்களில் - அதே கல்லூரி வளாகங்களில் நான்கு ஆண்டுகள் நடந்த கால்கள் - நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் நடப்பதும் - பறப்பதும் - நிச்சயம் மறக்கவே முடியாதது. இது உண்மையிலேயே எங்களுக்கு - உலக அதிசயமே அழகப்பரால் நாங்கள் அருள் பெற்றோம். நன்றி அழகப்பரே 🙏❤️👍 We have celebrated our 40th year reunion Ruby Jubilee celebration in our College campus (Alagappa Chattier College of Engineering and Technology, Karaikudi on March 28, 2025. More than 70 alumni and their family members are participated in this event. Morning session was the official one in our college Sangamam Hall. Evening session was the GALA dinner @ Chettinad Heritage, Nachandupatti, with Tamil Cultural program and tasteful Chettinad cuisine. Please See the below link for our Ruby Jubilee celebration Trailer 👇 https://youtu.be/kScD2GSwTDE?si=Kr5H534nQtK6gw2u
Image
 ‘பாலி ஊஞ்சல்’ பாலி பயணம்: 20–03–2025: – என் பார்வையில்.... பயணத்தின் இரண்டாம் நாள். Use Google Translator to read my Tamil Text in English also. நாங்கள் தங்கியிருந்த ஸ்தலா உபூடு ஹோட்டலில் காலை உணவு முடிந்தவுடன் அவரவர் ஜோடி புகைப்படங்கள் எடுத்தபிறகு, ‘பாலி ஊஞ்சல்’ பயணத்திற்கு அனைவரும் ஆவலாக சென்றோம். Bali Swing என்ற அழகிய பள்ளத்தாக்கில் 10க்கும் மேற்பட்ட விதவிதமான ஊஞ்சல்கள் கட்டி நம்மை அதில் ஏற்றி ஆகாயத்தில் பயணிக்க வைக்கிறார்கள். தனியாகவும், ஜோடியாகவும், உயரமாகவும், கட்டில் போன்றும், பறவைக்கூடுகள் போன்றும், பலவித வடிவங்களில் இந்த ‘தொட்டில் ஆட்டம்’ அனைவரையும் மிகவும் கவர்ந்தது. சரியான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருவதால் யாருக்கும் எந்த பயமும் இல்லை. பல வெளிநாட்டுப் பெண்கள் இதற்கான பிரத்யேக உடைகளையும் அணிந்து ஊஞ்சல் ஆட்டத்தில் விண்ணையும் மண்ணையும் மீண்டும் மீண்டும் தொட்டு மகிழ்ந்தனர். நண்பர்கள் அவர் தம் மனைவியர் அனைவரும் விரும்பி தங்கள் ஆட்டைத்தை தொடங்கி, தொடர்ந்தனர். நாங்கள் அழைத்துச் சென்ற புகைப்படக் காரர்கள் சீனுவும், ராஜுவும்தான் அனைத்து ஊஞ்சல்களுக்கும் ஓடி ஆடி அன...
Image
பாலி பயணம் – என் பார்வையில்....  மறக்க முடியாத ஆறு நாள் பாலி பயணம் தொடர்பில் எனக்கு தோன்றும் உணர்வுகளை என் ‘‘வள்ளிமகன்’’ Blogல் தொடர்ந்து எழுதுகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் படிக்கவும். உங்கள் கருத்துக்களை எழுதவும். Use Google Translator to read my Tamil Text in English also.  ‘‘மகிழ்வும் – நெகிழ்வும்’’ மட்டுமல்ல ‘‘காதலும்தான்’’ இந்த பாலி பயணத்தில் யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட் - நான்காவது நாள் மாலை  Sun & Sand  Resort ல் நடைபெற்ற “ஜோடி நடனம்.” ஆம். இவர்கள் எல்லாம் இப்படியும் ஆடுவார்களா… ? அதுவும் டூயட்…? அடேயப்பா ஆடிப்போய் விட்டேன், ஆடி. 🤣❤️ ஐம்பதிலும் ஆசை வரும் பாடல் கேட்டிருக்கிறேன். ஆனால் இங்கோ அறுபதிலும் ஆசை பொங்கிக் கொண்டு வருவதும், ஜோடிகளின் ஆட்டத்தில் தூக்கலாகத் தெரிந்தது. ஆம். இந்த ஜோடி நடனத்தில் அனைவரும் பார்த்தது “மகிழ்வும் - நெகிழ்வும்” மட்டுமல்ல… “காதலும்தான்”❤️❤️❤️❤️

தென் கைலாய யாத்திரை - வெள்ளியங்கிரி மலை சிவ யாத்திரை

Image
‘‘ஓம் நமச்சிவாய’’ ‘‘தென் கைலாய யாத்திரை’’ என் கல்லூரி நண்பர் முனைவர். திரு.முத்துராலிங்கம் ஏற்பாட்டில் மற்ற இரு நண்பர்கள் முனைவர் திரு.வள்ளியப்பன் மற்றும் தமிழக அரசு மின்துறை நிர்வாகப் பொறியாளர் பொறிஞர். திரு. கலைச்செல்வன் உடன் கடந்த 16–04–2023 ஞாயிறு அன்று ‘‘கோவை அருகில் உள்ள வெள்ளியங்கிரி’’ மலைக்கு சென்று மலையில் இருக்கும் சிவனைப் பார்க்கலாம் என்று கிளம்பினேன். எனக்கு எந்த திட்டமும் இல்லை. நண்பர்களுடன் ஒரு ஆன்மீகப் பயணம். அதுவும் எனக்குப் பிடித்த ‘‘மலையேற்றம்’’. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5833 அடி உயரத்தில் உள்ள மலை உச்சியில் ‘‘சிவதரிசனம்’’. அவ்வளவுதான் தெரியும். நான் தற்போது கடல் மட்டத்தில் இருந்து 4000 அடி உயரம் உள்ள குரங்கணி மலையில் என் காப்பி தோட்டத்திற்கு அடிக்கடி சென்று வருபவன். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வளர்ந்தவன். தற்போது அந்த மலைமுகட்டில் வீடு கட்டி வசிப்பவன். சுமார் 10 கிலோ மீட்டர் மலையேற்றம் என்பது தேனியில் இருக்கும் போது என் தினப்பணிகளில் ஒன்று. ஆகவே இந்த பயணம் பற்றிய எந்த முன் தயாரிப்போ அல்லது ஆலோசனைகளோ நான் செய்யவில்லை. 16–04–2023 ஞாயிறு காலை கே...