NUSA PENIDA ISLAND - பாலி பயணம் – ‘‘கடலில் ஒரு இலவச பாலி ஊஞ்சல்’’ நான்காவது நாள் – 22.03.2025 சனிக்கிழமை இன்று பாலித் தீவு அருகில் உள்ள NUSA PENIDA தீவுக்கு பயணப்படத் திட்டம். காலை 9 மணிக்குள் அனைவரும் காலை சிற்றுண்டி அருந்திவிட்டு, பஸ்ஸில் Sanur Harbour என்ற இடத்திற்கு சென்றோம். சுமார் 45 நிமிட பயணம். அங்கிருந்து ‘‘வேகப்படகு’’ மூலமாக சுமார் 75 நிமிடங்கள் ஆழ்கடலில் பயணம் செய்து NUSA PENIDA தீவை வந்தடைந்தோம். அங்கிருந்து அந்த தீவில் சுமார் நான்கு சுற்றுலா இடங்களுக்கு ( Broken Beach, Angel Billabong, Kling king Clif & Crystal Bay) காரில் சென்று பார்வையிட்ட பிறகு, மதிய உணவும் அங்கேயே அருந்திய பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் இதே படகுப் பயணத்தில் பயணம் செய்து பாலித் தீவு வந்தடைய திட்டம். படகில் பயணிக்கும் போதே பல ஜோடிகளுக்கு ரொமான்ஸ் மூட் வந்துவிட்டது. அவர்கள் படகின் பின்புறம் சென்று கடலின் பயண வேகத்திலும் இறுகப்பற்றி போட்டோ ஷூட் நடத்தியது, எங்களுக்கும் ஒரு பொழுது போக்காக அமைந்தது. சுமார் 75 நிமிடப் பயணத்திற்குப் பிறகு Nusa Penida தீவின் கரையில...